எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் கால் பதிக்கப் போகும் அசோக் லேலண்ட் நிறுவனம்..

இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள்  தயாரிக்க அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இதில் கால் பதிக்க துவங்கியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்குவதில் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் இதற்கான வர்த்தகம் அதிகரிக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க அதிக படியான முதலீட்டைச் செய்து வருகிறது.  டாடா மோட்டார்ஸ், ஓலா முன்னோடியாக இருக்கும் நிலையில் தற்போது அசோக் லேலண்ட் இந்தப் பட்டியலில் இணைத்துள்ளது.

கனரக வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்களின் தயாரிப்புக்கும், விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் அசோக் லேலண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உருவாக்கப்பட்ட ஸ்விச் மொபிலிட்டி நிறுவனத்தின் மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்காக புதிய தொழிற்சாலை அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை சென்னையில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது என ஸ்விச் மொபிலிட்டி நிறுவனத்தில் தெரிவித்துள்ளது.

அசோக் லேலண்ட் ஏற்கனவே சென்னை, ஓசூர் போன்ற பகுதில் தொழிற்சாலைகளை வைத்துள்ள நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் தான் அமைக்கும் என ஸ்விச் மொபிலிட்டி நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…