ஏற்றுமதியில் ஏறுமுகத்தில் செல்லும் பருத்தி ஜவுளி துறை.. !!

சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலிருந்த இந்தியா 2020-ம் ஆண்டு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கொரோனா மற்றும் பருத்தி மீதான விலை உயர்வு போன்ற காரணத்தால் கடந்த இரண்டு வருடமாக  ஜவுளி ஏற்றுமதியில் சிறிய சருக்களை கொடுத்தாலும் மீண்டும் பழையபடி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு கூறுகையில்   முன்பை போல் இல்லாமல் தற்போது ஏறுமுகத்தில் உள்ளது என குறிப்பிட்டனர். அதன்படி பருத்தி ஜவுளி ஏற்றுமதி 2021 நிதியாண்டில் ரூ.1.14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த இலக்கு நாம் எதிர்பார்த்த ரூ.1.02 லட்சம் கோடி அளவுக்கு அதிகமாக பருத்தி ஏற்றுமதி செய்ய செய்யப்பட்டுள்ளது என்றார். நாங்கள் எதிர்பார்த்ததை விட ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றனர். 2020 ஆம் நிதியாண்டில் பருத்தி ஜவுளி ஏற்றுமதி ரூ.73,500 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சீனா, எகிப்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இந்த நிலை அதிகரிக்கும் நிலையில்  வரும் ஆண்டுகளில் இந்திய பருத்தி ஆடைகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் பருத்தியின் விலை கடுமையாக உயர்வு மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி ஏற்படும் சிக்கல் போன்ற காரணத்தால் ஜவுளித் துறையை சேர்ந்தவர்களுக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என  இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…