தமிழ்நாட்டின் டிசைன் அப்படி – தொப்புள் கொடி உறவுகள்

ஆட்சிக் கலைக்கப்பட்டு இருக்கிறது. துரோகி என முத்திரை குத்தப்படுள்ளது. ஆனாலும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இலங்கை தமிழர் நலனில் அக்கறை செலுத்துவது அதன் வழக்கம். இப்போது இலங்கை பற்றி எரிகிறது. போராட்டம் வலுக்கிறது. பிரதமர் மாறி விட்டார்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமின்றி சிங்களர்களுக்கும் சேர்த்து உணவும், மருந்தும் அனுப்புகிறது முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு. தமிழ்நாட்டில் ஏற்கனவே முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தருவதுடன் மேலும் பல உதவிகள் செய்யப்படுகின்றன. இலங்கையில் இருந்து படகில் வரும் தமிழர்களுக்கும் உணவு, உறைவிடம் தரப்படுகிறது.

ஒன்றிய அரசின் உளவுத்துறை, வேறு கோணத்தில் கண்காணித்தாலும் தொப்புள் கொடி உறவுகளுக்கான உதவி தொடர்கிறது. ஐ நா அமைப்பின் அகதிகளுக்கானத் தலைமை ஆணையரகம் இதனைப் பாராட்டியுள்ளது. இந்தியாவுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டார் ஐ.நா. அகதிகள் அமைப்பின் பாதுகாப்பு உதவி உயர் ஆணையர். திருமதி ஜில்லியன் ட்ரிக்ஸ். ஏப்ரல் 25-ஆம் தேதி இந்தியா வருகை தந்த ஜில்லியன் ட்ரிக்ஸ், அகதிகளையும், இந்திய வெளியுறவுத் துறை விவகாரம், உள்ளுறவுத் துறை அமைச்சகம், தமிழக மாநில அதிகாரிகள், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் நிதியுதவி, ராஜதந்திர விவகார அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அவருடன் இவ்வமைப்பின் ஆசிய, பசிபிக் பிரிவின் இயக்குநரான, திரு இந்திரிகா ரத்வத்தே வருகை தந்திருந்தார்.

சென்னையில் உள்ள அலுவலகத்தில், ஈழ அகதிகள், இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழு உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கை நடத்த எதிர்கொண்ட சிரமங்கள், வாடகை, தினசரித் தேவைகளை சமாளிக்க பட்ட சிரமம், கல்வியைத் தொடர்வதிலிருந்த சிரமங்களைப் பகிர்ந்துகொண்டனர். வாலிப வயதிலுள்ள அகதிகள், அவரிடம் தங்கள் கல்வி, திறன் பயிற்சிகள், தாங்கள் ஏற்கெனவே சந்தித்த சிரமங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஜில்லியன்ஸ், இந்தியாவின் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் அகதிகளையும் சேர்த்துக்கொண்டதை, முன்னுதாரணச் செயல்பாடு எனப் பாராட்டினார். மேலும் அவர் அகதிகளின் உதவிக்கு வந்த ஐ.நா., கொடையாளிகள், தனியார் துறைகள், அரசுசாரா அமைப்புகள், பொது சமூகம் போன்றவற்றுக்கும் நன்றி தெரிவித்தார்.

அகதிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும், தீர்வுகளுக்கும் அவர்களை பிரித்துப் பார்க்காமல் ஒற்றுமை பாராட்டுதலே முக்கிய தீர்வு. அகதிகள் வளமடையவும், இந்தியாவின் வளர்ச்சியில் பங்களிக்கவும் ஆவணங்களே பிரதான தடை. அடையாளச் சான்றிதழ்கள் கிடைத்தால் மட்டுமே, வங்கிக் கணக்கு, சமூகத் திட்டங்களில் அகதிகள் பயன்பெறவும் தகுதியுள்ளவர்கள் அங்கீகாரம் பெறவும் முடியும். பாதுகாப்புக்கான உதவி உயர் ஆணையர் பேசுகையில், இலங்கை அகதிகள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் அவர்களது நாட்டுக்குத் திரும்புவதே நீடித்த தீர்வுக்கான அவசரத் தேவை என்றார்.

சென்னை வருகையின்போது அவர், தமிழக உயர் அதிகாரிகளுடனும் இலங்கை உயர் அதிகாரிகளுடனும் சந்திப்பை மேற்கொண்டார். நாற்பது ஆண்டுகளாக இலங்கை அகதிகளுக்கு இந்தியாவும் தமிழ்நாடும் அளிக்கும் ஆதரவை வெகுவாகப் பாராட்டினார். அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்துவருவதோடு, பலர் இங்கேயே பிறந்திருக்கின்றனர். இந்தியாவிலேயே தங்கவிரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது பற்றிய யோசனைகள் தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுவதையும் அவர் ஊக்குவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) சார்பில் அதன் ஆசிய-பசிபிக் மண்டலத்தின் இயக்குநர் திரு.இந்திரிகா ரத்வதே ,இலங்கைத் தமிழர் நலன் மற்றும் உரிமை சார்ந்த சிக்கல்களை அவர்கள் ஒப்புக்கொண்ட அதேவேளையில், “ஒரு நாடும் அதன் மக்களும் மற்றொரு நாட்டிலிருந்து நிலமிழந்து வந்த மக்களை 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் பகுதியில் தங்க வைத்து ஆதரவுக்கரம் கொடுப்பதை உலகின் வேறு பகுதிகளில் பார்க்க முடியாது. உணர்வுப்பூர்வமானதாக இருந்தால் மட்டுமே இது முடியும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மதிக்கத்தக்கவை. இந்திய அரசுடன் இணைந்து உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்” என்றார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலமாக உணர்வுப்பூர்வமான உதவிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். பொருளாதாரச் சீர்கேட்டால் இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்களவர்களும் கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், இலங்கைக்கு உணவுப்பொருள், மருந்து ஆகியவற்றை ஏற்கனவே ஏற்பாடு செய்து, அதனை வழங்குவதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

அரசு என்பதே மக்கள்தான். மக்களுக்கானதுதான். மக்களின் பங்களிப்பின்றி அரசு இல்லை. அரசின் மனிதாபிமான உதவிகளில் மக்களின் பங்கேற்பைக் கோரியுள்ளார் மாண்புமிகு முதல்வர். உணர்வுப்பூர்வமாக உதவும் கைகளின் எண்ணிக்கை உயரட்டும்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…