ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிக நிறுத்தம் – எலான் மஸ்க்..!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் முன்னணி சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை வாங்குவதாக அறிவித்து அதன்பின் ட்விட்டரில் 9.2% பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம்  எலான் மஸ்க் ட்விட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக மாறினார்.

இந்த நிலையில்  எலான் மஸ்க் க்கு ட்விட்டரில் தலைமை பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு  மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்குவதற்கு எலான் மஸ்க் முயற்சித்து 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் ட்விட்டர்  நிறுவனத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் அல்லது  நிர்வாக கை மாற்றமோ நடக்காமல் இருந்தது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறுகையில் ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5% போலி கணக்குகள் இருப்பதால் ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் தயக்கம் காட்டுவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் ட்விட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டிய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் அறிவித்த நிலையில் அது குறித்து சர்ச்சை சமூக ஊடகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…