விண்வெளியிலிருந்து விழுந்த பந்து !!

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விண்வெளியிலிருந்து உலோக பந்துகள் விழுந்துள்ளது. இச்செய்தி அங்கு வாழும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சுமார் 5 கிலோ எடை கொண்ட இந்த உலோக பந்து முதலில் ஆனந்த் மாவட்டத்திலுள்ள பாலேஜ் என்ற பகுதியில் விழுந்துள்ளது. பின்னர் கம்போலாஜ் என்ற பகுதியிலும், ராம்புரா என்ற பகுதியிலும் விழுந்துள்ளது. இதனால் பீதி அடைந்த மக்கள் காவல் துறைக்கு தாக்கல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின் ஆனந்த் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அஜிட் ராஜியன் கூறுகையில், “முதல் பந்தானது மாலை 4.45 மணியளவில் விழுந்தது, அதனைத்தொடர்ந்து இரண்டு பந்துகள் விழுந்துள்ளது. இந்த விபத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. காமபோஜ் பகுதியில் மட்டும் ஒரு வீட்டில் இந்த பந்து விழுந்துள்ளது. மற்ற இரண்டு இடங்களிலும்திறந்த வெளிகளில்தான் விழுந்துள்ளது. ”என்று தெரிவித்தார்.

விண்கலத்திலிருந்து இந்த பந்துகள் விழுந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.காவல் துறையினர் அந்த மூன்று உலோக பந்துகளையும் தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…