நானோ எனக்கு மிகவும் நெருக்கமான வாகனம் – ரத்தன் டாடா..

உலக அளவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக டாடா நிறுவனம் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பேஸஞ்சர் கார், சரக்கு வாகனம் என வெவ்வேறு பிரிவுகளில் வாகனங்களை தயாரித்து வருகிறது.
இது தவிர இப்போது மின்சார வாகன தயாரிப்பில் முழு கவனம் டாடா நிறுவனம் செலுத்து வருகிறது. இந்நிலையில் டாடா நானோ காரை டாடா நிறுவனம் ஏன் அறிமுகம் செய்தது என்பதை தெரிவித்துள்ளார் டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா.

பெரும்பாலும் இந்தியக் குடும்பங்கள் சாலையில் பயணத்தின் போது தாய், தந்தைக்கு மற்றும் குழந்தைகள் என இக்கட்டான சூழலில் பயணிப்பது நான் பார்த்து இருக்கிறேன்அவர்கள் பாதுகாப்பான பயணத்திற்கு என்ன செய்யலாம் என யோசித்து போது உதயமான ஐடியா தான் நானோ கார் என தெரிவித்தார்.
அப்போது முடிவு செய்தேன் அந்த பாதுகாப்பான் வாகனம் நானோ கார் தான் என்று. நம் மக்கள் அனைவருக்குமான கார் என தனது இன்ஸ்டாகிராம் நான் பதிவு செய்ததும் அனைவரும் தனக்கு பிடித்துள்ளது என தெரிவித்தனர். இருந்தாலும் சந்தையில் மலிவு விலை கார்களுக்கான டிமாண்ட் குறைந்த காரணத்தால் விற்பனையில் இது பின்தங்கியது என குறிப்பிட்டார். இருந்தாலும் இது சென்டிமென்ட் காரணமாக இந்த காரின் உற்பத்தியை நிறுத்த முடியாது என ரத்தன் டாடா தெரிவித்தார்.