ஆட்டோ கட்டணம் உயருகிறதா?… நுகர்வோர் சங்கத்துடன் அரசு ஆலோசனை!

மக்கள் நலன் பாதிக்காத வகையில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஆட்டோக்களில் ஜி.பி.எஸ் மீட்டர் பொருத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுசீரமைப்பது தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மேலாண்மை அரங்கத்தில் போக்குவரத்து இணை ஆணையர் சிவக்குமரன் தலைமையில் நுகர்வோர் நலச் சங்க பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 31 நுகர்வோர் நலச் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் 25 நுகர்வோர் நலச் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நேற்றைய தினம் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் உடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று நுகர்வோர் நலச் சங்க பிரதிநிதிகள் உடன் இன்று ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது ஆட்டோ ஓட்டுநர்களை மட்டும் பாதிக்கவில்லை என்றும் அனைத்து தரப்பு மக்களின் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைப்பதில் குறைந்தபட்சமாக 1.5 கி.மீ 30 ரூபாய் கட்டணமும் அடுத்த ஒவ்வொரு கி.மீ 13 ரூபாய் இருக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவித்து உள்ளதாகவும், ஜி.பி.எஸ் மீட்டர் அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

மற்ற மாநிலங்களில் எவ்வாறு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோ, அதேபோன்று தமிழகத்திலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர்கள், அவசர காலத்திற்கு பொதுமக்கள் ஆட்டோவை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…