கௌதம் அதானியை காட்டிக்கொடுக்கும் கடன் சுமை..! ஆதரவு தரும் ஒன்றிய அரசு..!!

கவுதம் அதானி இந்தியாவில் இருக்கும் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆசியாவிலேயே முகேஷ் அம்பானிக்கு பிறகு இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தில் கவுதம் அதானி இருக்கிறார்.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 5.66 லட்சம் கோடி ரூபாய் வரும். மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், மின் பகிர்மானம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள் என பல துறைகளில் கவுதம் அதானி முக்கிய பங்கு வகிக்கிறார்.

குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, என பல மாநிலங்களில் அதானி பவர் நிறுவனம் அமைந்துள்ளது. கவுதம் அதானியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது  பிரதமர் நரேந்திர மோடியின் வியாபார கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 

 அதானியின் பல்வேறு வியாபார விரிவாக்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிகள் மோடியின் அரசு உறுதுணையாக இருக்கிறது என பல பத்திரிகைகள் குற்றம் சாட்டினார். கெளதம் அதானிக்கு நரேந்திர மோடி அரசு தரப்பிலிருந்து போதிய உதவிகள் கிடைக்க வழி செய்தது.

இந்த நிலையில் பல வங்கிகள் கவுதம் அதானி குழுமத்திற்கு கடன் தர முன்வந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் கவுதம் அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் வங்கி 1 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில்  அதானி குழுமத்தின்  மொத்த கடன் தொகை 2 லட்சம் கோடிகளுக்கு மேல் உள்ளது என சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி கொடுத்திருக்கக் கூடிய மொத்த கடன் தொகை 27 லட்சம் கோடி ரூபாய்கள்.

அதானி குழுமத்தின் மொத்த கடனுமே பாரத ஸ்டேட் வங்கி கொடுத்திருக்கிறது எனக்கொண்டால், வங்கி கொடுத்திருக்கும் மொத்தக் கடனில் கிட்டத்தட்ட 8 விழுக்காடு அதானி குழுமத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது என காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *