நிலக்கரி தட்டுப்பாட்டை குறைக்க இந்தியா மேற்கொள்ளும் புதிய முயற்சி..!!

இந்தியாவில் நிலவிய அதிக வெப்பம் காரணமாக மின்சார தேவையானது மிக அதிக அளவில் தேவைப்பட்டது. ஆனால் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டுகள் அதிக அளவில் ஏற்பட்டு வந்தது.  நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனை தொழில்துறை உற்பத்தி, மின் உற்பத்தி பாதிப்பு என பல பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டது.  

இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் உச்சத்தை தொட்டது. இதனால் நிலக்கரி பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாக உருமாறியது. இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தள்ளுபடி விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. 

Insights into Editorial: Revisit the idea of 'aging out' India's coal  plants - INSIGHTSIAS

இதற்காக ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா,உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பருவ மழை காலத்திற்கு ஏற்ப நிலக்கரி கையிருப்பு வைக்காவிட்டால்  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் குறைந்த அளவிலான கையிருப்பு மட்டுமே  உள்ளது பெரிய சிக்கலை உண்டாக்கும்.

தாமோதர் வாலி கார்ப்பரேஷன் மற்றும் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கூறிய நிலையில் இப்போது கூடுதலாக நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *