பெரியார் பள்ளி: மாணவர் கலைஞர் – டியர் Enemies நல்லாக் கதறவும்

கும்பகோணத்தில் இருக்கும் கவர்மென்ட் காலேஜ் ரொம்ப பழசு. பெரிய மேதைகள் படிச்ச காலேஜ்னு பேரு உண்டு. அந்தக் காலேஜில் அப்ப இரண்டு பானை உண்டு. ஒரு பானையில் உள்ள தண்ணீரை பிராமண மாணவர்கள் குடிக்கணும். இன்னொரு பானையில் உள்ள தண்ணீரை பிராமணரல்லாத மற்ற சமுதாயத்து மாணவர்கள் குடிக்கணும். காலேஜ் ஹாஸ்டலிலும் இப்படி டபுள் பானை சிஸ்டம்தான்.

ஃபர்ஸ்ட் இயரில் சேர்ந்த சம்பந்தம் என்ற ஸ்டூடன்ட்டுக்கு இது தெரியலை. அந்தப் பையன் போய், பிராமணர்களுக்கானப் பானையில் இருந்த தண்ணியை குவளையில் எடுத்துக் குடிச்சிட்டாரு. அதைப் பார்த்த பிராமண மாணவர்கள் சண்டைக்குப் போயிட்டாங்க. “சம்பந்தம்.. நோக்கு சம்பந்தமில்லாத இந்தப் பானை ஜலத்தை எப்படிக் குடிக்கலாம்?”னு சத்தம் போட்டதோடு, பிரின்ஸிபால்கிட்டேயும் புகார் சொல்லப் போயிட்டாங்க. அவர் லீவில் இருந்ததால், ஹாஸ்டல் வார்டன்கிட்ட புகார் போயிடிச்சி. வார்டன் கணேச அய்யர் இந்த மாதிரி விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. அந்தப் பானைக்குப் பதிலா இந்தப் பானையில தண்ணி குடிச்ச ‘குற்றத்’துக்காக சம்பந்தத்துக்கு ஃபைன் போட்டுட்டாரு.

Atrocities in Dalits' ( a so called Lower Caste Hindu )daily life | THE  ONLY TRUE RELIGION DEBATE

இது தவமணிராசன்ங்கிற ஸ்டூடன்ட்டுக்குத் தெரிஞ்சதும், வார்டனுக்கு எதிரா ஸ்டூடன்ட்ஸைத் திரட்டிப் போராட்டம் நடத்த ஆரம்பிச்சிட்டாரு. காலேஜ் வாசலில் ஒரே அமர்க்களம். இதைப் பார்த்த மக்கள், ஊருக்குள் போய்ச் சொல்ல, கும்பகோணமே பரபரப்பாயிடிச்சி. பெரியாரோட சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் பலரும் காலேஜ் பக்கம் வந்துட்டாங்க. போராட்டம் பெரிசாயிடிச்சி.

பதறி அடிச்சிக்கிட்டு வந்தாரு பிரின்ஸிபால். பால் பொங்கும்.. ஆனா.. நம்ம காலேஜில பச்ச தண்ணியே இப்படி பொங்கிடிச்சே’ன்னு அவருக்குப் பதட்டம். சம்பந்தத்துக்கு வார்டன் போட்ட ஃபைனை கேன்சல் பண்ணுறதா அறிவிச்சாரு. ஸ்டூடன்ட்ஸ் “ஓ…” போட்டாங்க.

இனிமே இதுபோல பிரச்சினை வரக்கூடாதுன்னு எல்லாரும் சொல்ல, “பிராமணர்களுக்குத் தனிப்பானை கிடையாது.. எல்லாருக்கும் ஒரே பானைதான். அதிலேதான் தண்ணி குடிக்கணும்”னு பிரின்ஸிபால் உத்தரவு போட்டாரு. போராட்டம் வெற்றி அடைஞ்சதால, அந்த தனிப் பானையை தூக்கிப் போட்டு உடைச்சு celebrate பண்ணியது ஸ்டூடன்ட் டீம்.

பழைய பானை சிதறிடிச்சி. ஆனா, ஸ்டூடன்ட்ஸ் டீம் ஒண்ணு புதுசா சேர்ந்திடிச்சி. காலங்காலமா காலேஜிலும் வெளியிலும் கடைப்பிடிக்கப்படுற இதுபோன்ற தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிரா ஒரு அமைப்பை ஆரம்பிக்கணும்னு பேசினாங்க. தவமணிராசன், கருணானந்தம் இவங்களெல்லாம் சேர்ந்து ‘திராவிட மாணவர் கழகம்’ங்கிற அமைப்பை உருவாக்குனாங்க. 1943ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அந்த அமைப்பை முறைப்படித் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

மாணவர் அமைப்பைத் தொடங்கி வச்ச அண்ணா எம்.ஏ. பட்டம் வாங்கியவர். அமைப்பை உருவாக்குன கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்களும் பட்டம் வாங்கப் போறவங்க. அந்தக் கும்பகோணத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாரூரில்தான் நம்ம Last Bench மாணவர் இருந்தாரு. அவர், பெரியார் மாதிரி ஸ்கூல் படிப்பு வரைக்கும்தான்னாலும், பெரியார் சொல்லித் தரும் கொள்கைப் பாடத்தைக் கவனமா படிச்சிக்கிட்டிருந்தாரு.

காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் திராவிட மாணவர் கழகத்தைத் தொடங்கியது போல, தன்னோட 17 வயதிலேயே, தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கினாரு கலைஞர். திராவிடக் கொள்கையை like, share பண்ணுறவங்களையெல்லாம் அதில் சேர்த்தாரு.

அந்த மன்றத்தின் ஆண்டுவிழாவுக்குப் பலரையும் கூப்பிட்டிருந்தாரு. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்கிட்டே வாழ்த்துக் கவிதை கேட்டு 16-11-1942ல் ஒரு லெட்டரும் அனுப்பியிருந்தாரு. “தமிழ் மாணவர் மன்றத்தின் வாயிலாகத் தங்களின் கவி ஒன்று வெளியிடத் தீர்மானித்துள்ளோம். தயவுசெய்து எங்களை அலட்சியம் செய்யாமல் ஒன்று அனுப்பவும். மிக மிக வணக்கம். இங்ஙணம், தங்களன்புள்ள மு.கருணாநிதி’ என்று அதில் இருந்தது.

பெரியார் அதிரடியா சொல்ற கருத்துகளை, உணர்ச்சி மிகுந்த தமிழால் அழகானக் கவிதைகளாக்கியவர் பாரதிதாசன். அந்தப் பெரியாரின் மாணவன் நடத்துற மன்றத்துக்கு ஒரு கவிதை என்ற கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் கவிதை எழுதித் தந்தாரு.

“தண்பொழிலில் குயில்பாடும் திருவாரூரில்… ” என்று தொடங்கி, எண்சீர்விருத்தத்தில் கவிதை மழை பொழிந்தது. அந்தக் கவிதையில்தான்,

H V Hande On Karunanidhi: No Parallel To Kalaignar's Tamil Erudition, His  Ready Wit, Debating Prowess

‘கிளம்பிற்றுக்காண் தமிழச்சிங்கக் கூட்டம்

கிழித்தெறியத்தேடுதுகாண் பகைக் கூட்டத்தை” என்ற வரிகள் இடம்பெற்றன.

இன்னைக்கு வரைக்கும் பகைக் கூட்டத்தை அலறவிடுற பெயர்தான் ‘கலைஞர் கருணாநிதி’

மனுசன் இறந்து நாலு வருசம் ஆகப் போகுது. ஆனாலும் அலறல், கதறல் ஓயமாட்டேங்குது. செத்து 50 வருசமானபிறகும் பெரியார் பெயரைக் கேட்டாக் கதறுற கும்பல், அவரோட ஸ்கூல் last bench ஸ்டூடன்ட் கலைஞர் பெயரைக் கேட்டாலும் கனவிலும் கதறுது.

கதறிக்கிட்டே கிடங்க.. …

(அலப்பறை தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *