ஏற்றுமதியில் ஏமாற்றம் கொடுத்த தேயிலை விற்பனை..!!

இலங்கையிலிருந்து உலகம் முழுவதும் தேயிலைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நிலையில்  கடும் பொருளாதார நெருக்கடியில் தற்போது இலங்கை சிக்கியுள்ளது. இந்நிலையில் இலங்கையின் தேயிலை மார்க்கெட் பெரிய பாதிப்பை சந்தித்தது.

இந்நிலையில் இந்தியாவின்  தேயிலை ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு மட்டும் 300 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய தேயிலைகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் கலந்து இருப்பதாக பல நாடுகளில் இந்திய தேயிலையை திருப்பி வருவதாக குற்றம் எழுத்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தேயிலைகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் தயாரித்து வருகின்றன.

இருப்பினும் பெரும்பாலான தேயிலை வாங்கும் நாடுகள் அவற்றை திருப்பி அனுப்புவதற்கான காரணம் குறித்து இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேயிலை ஏற்றுமதியினால் இலங்கைக்கு கூடுதலான வருமானம்! - VTN News

பல நாடுகள் தேயிலைக்கான கடுமையான நுழைவு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்று கூறியுள்ளார்.   பெரும்பாலான நாடுகள் தரநிலைகளின் மாறுபாடுகளைப் பின்பற்றுகின்றன என்றும் அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளை விட மிகவும் கடுமையானவை என்றும் கூறியுள்ளார்.

எனவே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று பலர் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *