இந்தியா-செனகல் இடையே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

இந்தியா-செனகல் வணிக நிகழ்வில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செனகல் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியபோது கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியா- செனகல் நாட்டிற்கு இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் வரவேற்க தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. 

கொரோனா காலத்திலும் சுமாா் 1.65 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடந்தது பெருமை கூறிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Trade | International Institute for Sustainable Development

இது குறித்து அவர் பேசுகையில் இந்தியாவில் இருந்து ஜவுளி, உணவுப் பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் செனகலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் பாஸ்பாரிக் அமிலம் மற்றும் முந்திரியின் மூலப்பொருட்கள் செனகலில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது என குறிப்பிட்டார்.

இந்த வணிகம் மேலும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப் பயணத்தின் கடைசி கட்டமாக வருகிற கத்தார் நாட்டிற்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-செனகல் நாடுகளுக்கு இடையேயான தூதரக ரீதியிலான நட்புறவு என்பது  60 ஆண்டுகள் பயணம் எனவும் குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *