ரீடைல் நிறுவனத்தின் புதிய யுக்திகளை கையாளும் ரிலையன்ஸ் குழுமம்..!!

இந்தியாவில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தற்போது பல முக்கிய யுக்திகளை தங்களுடைய தொழில் மாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவையின் தேவையும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல முன்னணி நிறுவனங்கள் இப்பிரிவு சேவையில் இறங்கி வருகிறது.

சமீபத்தில் இந்த துறையில் புதிதாக களமிறங்கிய பல முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வெற்றி பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்ஸ்டென்ட் டெலிவரி சேவையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களமிறங்கியுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியாவில் தற்போது முக்கிய சேவையாக உருவெடுத்திருக்கும் இன்ஸ்டென்ட் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் இறங்க முடிவு செய்துள்ளது.

Reliance launches JioMart in more than 200 towns across India | Digit

இதற்காக ரிலையன்ஸ் ரீடைல் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே மளிகை பொருட்கள், உணவுப் பொருட்கள், காய்கறி, ஆடை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜியோமார்ட் வாயிலாக ஹோம் டெலிவரி செய்து வருகிறது. இதன் நீட்சியாக ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மளிகை பொருட்களை உடனடியாக டெலிவரி செய்யும் சேவை அளிக்க உள்ளது.

இதற்காகப் புதிய மற்றும் தனிச் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் சேவை தற்போது மும்பையில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் ஜியோமார்ட் இயங்கும் 200க்கும் அதிகமான நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டம் தீட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *