எச்சரிக்கும் எலான் மஸ்க்..!! ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட போவதாக அறிவிப்பு..!!

எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்க போவதாக அறிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் போலி கணக்குகள் தரவுகளை வழங்க வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க் இல்லையெனில் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை முழுமையாக வழங்கத் தவறினால் ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tech billionaire, Elon Musk threatens to drop Twitter deal

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒப்பந்தத்தின்படி ட்விட்டர் தனது கடமைகளை செய்ய வெளிப்படையாக மறுந்து வருகிறது. போலிக் கணக்குகள் பற்றிய தரவின் மூலம் சொந்தை கண்டறியும் என்ற கவலையின் ட்விட்டர் நிறுவனம் தரவை நிறுத்தி வைக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்விட்டர் தனது கடமைகளில் இருந்து மீறுவதால் இணைப்பு ஒப்பந்தத்தை முறித்து கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எனக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

போலிக் கணக்குகள் விவரங்களை முழுமையாக தராவிட்டால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று எலான் மஸ்க் கூறியது டீவீட்டர் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *