இன்ஸ்டாக்ராமை லவ் கிராம் ஆக்கிய விக்னேஷ் சிவன்!

போடா போடி, ‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பு பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் நானும் ரவுடி தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர். விவேகள் இருவருக்கும் நிச்சியதார்தம் ஆனா நிலையில் விரைவில் திருமணமும் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, கதாநாயகியாக சமந்தா, நயன்தாரா நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தின் முதல் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தில் இடம்பெற்ற சூப்பரான சீனை இமிடேட் செய்யும் படியான போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியது. தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளது. மேலும் படத்தின் கதாநாயகி நயன்தாரா டப்பிங் பணியை துவங்கி உள்ளதை, படத்தின் இயக்குனரும் நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் கவிதையோடு நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *