ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை!

தமிழில் சாந்தனும் மற்றும் சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மி கவுதம். தெலுங்கு, கன்னடம், இந்தி, படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சிரஞ்சீவி நடிக்கும் போல ஷங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

ராஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுடிகளி சுதீர் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் இதனை மறுத்த இருவரும் தாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்றனர். இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ராஷ்மி விளக்கமோ மறுப்போ எந்த விதப்பான கருத்தையோ தெரிவிக்கவில்லை. சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம் திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *