இவ்வளவு சுலபமா வீட்டிலேயே அப்பளம் செய்துவிடலாமா?

முக்கிய பொருட்கள் :
1 கப் அரிசி மாவு
தேவையான பொருட்கள் :
- 1 தேக்கரண்டி சீரக விதைகள்
- தேவையான அளவு பெருங்காயம்
- 1/2 தேக்கரண்டி எள் விதை
- தேவையான அளவு உப்பு
- 2 கப் நீர்
செய்யும் முறை:
அரிசி மாவு, சீரகம், பெருங்காயம், எள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கட்டி விழாதவாறு நன்கு பிசைய வேண்டும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிசைந்த மாவை தட்டில் வைத்து 10 -15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
அதன் பின்பு வேக வைத்த மாவை எடுத்து சூரிய ஒளியில் 2 -3 நாள்கள் உளர வைக்க வேண்டும்..
நன்கு உளர்ந்த பிறகு அதனை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.