ஒருவரின் இறந்தநாளையே காதலர் தினமாக கொண்டாடுகிறோம்…

உலகில் பல மொழிகள் இருந்தாலும், அனைவருக்கும் தெரிந்த ஒரே மொழி காதல். சாதி, மத, இன, நிற, மொழி, வேறுபாடுகளை தாண்டி பிறந்தது காதல்தான். அத்தகைய சுவையான காதலர் தினம் தோன்றிய சுவாரசிய வரலாறு குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதல் செய்யும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை வெளிப்படுத்த விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதலை மையமாக வைத்து பல இலக்கியங்கள் இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது பெருமை கூறிய ஒன்று. உலகத்தின் முதல் கலவி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான்.
உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. பல நாட்களாக மறைத்து வைத்த காதலை வெளிப்படுத்துவது முதல், காதலன் அல்லது காதலிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்குவது வரை, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும். ஸ்பெஷல் டேட்டிங் அல்லது அவுட்டிங் செல்லும் போது, பண்டிகை நாட்களுக்கு அலங்கரித்துக் கொள்வது போல, அழகாக, சிறப்பான தோற்றத்தை பெற பலரும் விரும்புவார்கள்.
கிளாடியஸ் ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விடுத்துள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தார்.அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து செய்தியை ஒரு அட்டையின் மூலம் அனுப்பிவைத்தார்.
இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவதை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் என்றானது. பின்னாளில் அது காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.