மசாலா தயிர் சாண்ட்விச் செய்யும் முறை!

தேவையான பொருட்கள்:
4 Numbers வெட்டப்பட்ட பிரட்
1/4 கப் நறுக்கிய கேரட்
தேவையான அளவு தூள் சர்க்கரை
தேவையான அளவு உப்பு
3/4 கப் முட்டைக்கோசு
1/4 கப் குடை மிளகாய்
3/4 கப் தயிர்
தேவையான அளவு மிளகு
1/4 கப் சோளம் சாட் மசாலா தேவையான அளவு
கரம் மசாலா தேவையான அளவு
காஷ்மீரி சில்லி பவுடர் சிறிதளவு
செய்முறை:
முதலில் தயிரில் உள்ள அதிகப்படியான தண்ணீரைக் குறைக்க வேண்டும். எனவே ஒரு துணியை சல்லடை போல பயன்படுத்த வேண்டும். துணியின் மேலே தயிரை ஊற்றி அதை 2 மணி நேரம் நீர் வடியும் வரை தனியாக வைக்கவும். பிறகு ஒரு கிண்ணத்தில் நீர் நீக்கிய தயிர், சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். அதன்பிறகு அதில் தூள் சர்க்கரை, உப்பு, மிளகு,சாட் மசாலா, கரம் மசாலா,காஷ்மீரி சில்லி பவுடர் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். அதன் பிறகு ரொட்டியின் ஓரங்களை வெட்டிவிட்டு முன்பு தயாரித்து வைத்த கலவையை ஒரு ரொட்டியின் மேற்பரப்பில் பரப்பவும். அதன் பிறகு அந்த தயிர்க் கலவையை மற்றொரு ரொட்டி துண்டைக் கொண்டு மூடவும். பிரட்டை டோஸ்ட் செய்து சாப்பிட நினைத்தால் கலவையைக் கலக்கும் முன்பு ரொட்டியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு முன்பு செய்தது போலவே கலவையை செய்து ரொட்டியில் பரப்பி விடவும்.இப்போது சுவையான தயிர் சாண்ட்விச் தயார். இந்த ஆரோக்கியமான உணவை எளிதாக செய்யலாம். காலை உணவுக்கு ஏற்றது.