பஞ்சாப் தேர்தலுக்கு ஸ்கெட்ச்… சீக்கியர்களுடன் பஜனை பாடிய பிரதமர் மோடி!

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லியில் பஜனை பாடி வழிபாடு நடத்திய வீடியோவைரலாகி வருகிறது.
சீக்கிய மதக்குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி கரோல் பாக்கில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோவிலுக்கு இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார். நாட்டு மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி தீப ஆராதனை காட்டி, பூஜை செய்தார். பிரதமர் மோடி, அங்கு சென்ற போது சாகித் கிர்பானே என்ற பஜன் கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. கோவிலில் கூடியிருந்த பக்தர்களுக்கு நடுவே அமர்ந்து, இசை வாத்தியங்களை இசைத்தபடியே, பிரதமர் மோடி பஜனையில் பங்கேற்றார். அதன் பின்னர் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய மோடி அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.