எதிர்ப்பு சக்தி நிறைந்த மூன்று வகை பழச்சாறு!

வெயில் காலம் வந்துவிட்டதால் நம் உடலுக்கு நீர்சத்து அதிகம் தேவை படும். வெயில் காலங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் நிறைய பழ வகைகளை உன்ன வேண்டும். பழச்சாறாக உண்டு வந்தால் உடல் சீராக இருக்கும். பலவகை பல பழசாறுகள் உண்டு. இந்த பதிவில் எதிர்ப்பு சக்தியை தரும் பழச்சாறு செய்வது எப்படி ? என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
2 Numbers கேரட்
1/2 Numbers வெள்ளரிக்காய்
1 Numbers ஆரஞ்சு
1/2 கப் சீனி
1 கப் நீர்
கேரட்,வெள்ளரிக்காய்,ஆரஞ்சு பழங்களை சிறிது சிறிதாக நன்கு நறுக்கி அதில் சிறிது உப்பு தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்க்க வேண்டும்.
இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அறைக்க வேண்டும்.
இந்த ஜூஸை நன்கு வடிக்கட்டி குடித்தால் சுவையும் அருமையாக இருக்கும்,ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும்.