‘மேகதாது அணை விவகாரம்’ ஒன்று சேரும் அரசியல் கட்சிகள்..

இன்று நடந்த தமிழக சட்டப்பேரவை விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசானது தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்விதமான அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்க கூடாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதற்கு அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடகவிற்கு இடையில் இருக்கும் ஒரு நீண்ட கால பிரச்சனை ஆகும். இதற்காக இரு மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது கலவரம் ஏற்படுவதுண்டு. காவிரி பிரச்சனை தலைதூக்கும் போது இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லையில் பதற்றம் உண்டாகும்.
சில இந்த பிரச்சனைக்கு தீர்வாக உச்ச நீதிமன்றம் 16/2/18 அன்று ஒரு தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையின் வேறு எந்த இடத்திலோ அணை கட்ட வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
இப்படி இருக்கும் சமயத்தில் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மும்முரம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் இதற்கு மத்திய அரசானது தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்விதமான அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்க கூடாது.என அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்தார். அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.