தமிழக  பட்ஜெட் கூட்டத்தொடரில் எதற்கும் துணிந்தவர்களாக   மாறும் எதிர்கட்சியினர். 

கடந்த 18-ம் தேதி 2022 – 23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நிதி அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து 19-ம் தேதி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  வேளாண் துறை பட்ஜெட் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். 

இந்த கூட்டத்தொடரில் மக்களுக்காக  பல சாதக, பாதக அறிவிப்புகள்  இருந்த போதிலும் அதனை எதிர்க்கும் விதமாக முதல் நாள் சட்டசபை ஆரம்பிக்கும்போதே எதிர் கட்சியினர் வெளிநடப்பு செய்தார்கள். 

இரண்டு நாட்கள் தமிழக  பட்ஜெட் குறித்த  அறிக்கை முடிவடைந்த நிலையில், அந்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று(திங்கள்) 21-ம்  தேதி முதல் 23-ம் வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு  தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெறும். இந்த  நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க வினர்  எழுப்பும் வினாக்களுக்கு அந்த அந்த  துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும். கூட்டத் தொடரின் இறுதியில்  தமிழக முதலமைச்சர் இந்த  பட்ஜெட் குறித்து பேசி   கூட்டத்தொடரை நிறைவு செய்வார்.

இந்த நிலையில் அ.தி.மு.கவின்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் அமைச்சர் வேலுமணி வீட்டில் வருவாய் வரித்துறையினர் நடத்திய  சோதனை என ஆளும் கட்சியின் அதிரடி செயலால் நிலைகுலைந்து போன அ.தி.மு.க வினர் அதை பழிதீர்க்கும் விதமா  இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க வினரை எதிர்த்து பல கேள்விகள் கேட்க எதிர் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…