மீண்டும் உதவி கரம் நீட்டும் அமெரிக்கா…. போரில் வெற்றி பெறுமா உக்ரைன்…

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை  எதிர்த்து ரஷ்யாவானது கடந்த ஒரு மாதமாக உக்கிரன் மீது போர் தொடுத்து வருகிறது. இதற்கு நேட்டோ அமைப்பில் உள்ள பல நாடுகள் உக்கிரைன் அரசுக்கு ஆதரவாக ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. 

அந்த வகையில் அமெரிக்காவும் உக்ரைன்- ரஷ்யா போரின் தொடக்கம் முதலே உக்ரைனுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறது. போர் தொடங்கிய போது  (பிப்ரவரி 26), போரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான உக்ரைனுக்கு சுமார் ரூ.4,500 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்கி அமெரிக்க அரசு தங்களின் ஆதரவை வெளிக்காட்டியது. 

இந்நிலையில் இன்று வரை போர் முடிவுக்கு வராத சூழ்நிலையில் தற்போது உக்ரைனுக்கு மீண்டும் 2,250 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க உள்ளதாக  அமெரிக்க அரசு  முடிவு செய்துள்ளது.

தற்போது  அமெரிக்கா வழங்கும்  இந்த ராணுவ உபகரணங்களில் லேசர் ராக்கெட்,  இருளிலும் குறிபார்த்து தாக்கும்  ஆயுதங்கள், மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றை உள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைன் தங்களை பாதுகாக்க  உதவும் வகையில் இந்த ராணுவ உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

போரை தவிர்க்க ரஷ்யாவிடம்  ஐ.நா. அமைப்பு  பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் ரஷ்யா போரை நிறுத்துவதாக தெரியவில்லை என பல நாடுகள் ரஷ்யா மீது குற்றம் சாட்டியது குறிபிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….