வெயில் காலத்தில் எவ்வாறு முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வது?

தற்போது வெயில் காலம் துவங்கி உள்ளதால் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் நாம் தினமும் வெயிலில் சென்று வருவதால் நமது முகம் பொலிவற்று, கருமை நிறமாக மாறி விடும். அதை நாம் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே நம் முகத்தில் வரும் கருமையை போக்கி முகத்தை எப்போதும் போல பொலிவுடன் வைத்துக்கொள்ளலாம்.

வெயிலில் சென்று வீடு திரும்பிய உடன் முகத்தை நன்று கழுவவேண்டும். பின்பு தயிரைய் நம் முகத்தில் பேஸ் பேக் போல் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை காயவைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு நாம் எப்போது வெயிலில் சென்று வருகிறோமோ அப்போது எல்லாம் தொடர்ந்து இதை செய்து வந்தால் நம் முகமாக கருமையாகாமல் தவிர்க்கலாம்.

வெயில் காலத்தில் சருமத்தை சீராக வைத்து கொள்ள அவ்வப்போது தக்காளி பழ சாற்றை முகத்தில் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை காயவைத்து பின்பு முகத்தை கழுவ வேண்டும். அதே போல் உருளைக்கிழங்கு சாற்றையும் முகத்தில் தடவி பின்பு அது காய்ந்தவுடன் முகத்தை கழுவி வருவதனால் நம் முகம் வெயில் காலத்திலும் பொலிவாகவும், அழகாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.