தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய கவர்ச்சி நடிக்கை!

பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தமிழில் ‘என் சகியே’, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019-ல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணமான தகவலை இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார். அதில் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கூறி இருந்தார்.

பின்பு கருத்துவேறுபாடு காரணமாக ரிதேஷை பிரிந்தேன் என்றும் தெரிவித்தார். காதலித்த போது ரிதேஷ் பெயரை தன் இடுப்பிற்கு மேல் பச்சை குத்தியுள்ளார். அதை தற்போது நீக்கியும் உள்ளார். பச்சை குத்தியதை அழிப்பதற்காக சென்ற போது எடுத்த விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த விடீயோவில் ரிதேஷின் பெயரை டாட்டூ குத்துபவர் அழிக்கிறார்.

இது குறித்து ராக்கி கூறும் போது, ‘திருமணம் முடிந்து மூன்று வருடத்துக்குப் பிறகு ரிதேஷ் பிரிந்துவிட்டார். இப்போது என் உடலில் இருந்தும் பிரிந்துவிட்டார். தீவிரமாக காதலித்ததால் அவரது பெயரை பச்சை குத்தினேன். இப்போது அதை அழிக்க கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் யாரும், யார் பெயரையும் பச்சை குத்திக்கொள்ள வேண்டாம்’ என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *