சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பதவியேற்ற 8 நீதிபதிகள் யார், யார் தெரியுமா?

Judge

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகாக உள்ள 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள்,
சத்திகுமார் சுகுமார குரூப், கே. முரளிசங்கர், ஆர். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கெலிஜியம் குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து குடியரசு தலைவர் அண்மையில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், கே. முரளிசங்கர், ஆர். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகிய 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்தார்.

நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ள நீதிபதிகள் முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன் – மனைவி ஆவார்கள். மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய இவர்கள் அனைவரும் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர்.

கூடுதல் நீதிபதியாக உள்ள நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் மட்டும் இன்று நிரந்தர நீதிபதியாக பதவியேற்றுக்கொள்ளவில்லை. அவரின் உடல்நிலை காரணங்களால் அவர் பதவி ஏற்கவில்லை மற்றொரு நாளில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கபட்டுள்ளது.

பதவியேற்ற நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

நீதிபதிகளின் வாழ்க்கை வரலாறு..

ஜி.சந்திரசேகரன்

1962 மே 31ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர்.
பின்னர் சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை, முசிறி, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சென்னை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

வி.சிவஞானம்:

1963 ஜனவரி 1ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். மயிலாடுதுறை, கும்பகோணம், ஈரோடு, நாமக்கல், பவானி, துறையூர், அரியலூர், கடலூர், பன்ருட்டி, பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

ஜி.இளங்கோவன்

1963 ஜூன் 6ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கோவை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருமங்கலம், மதுரை, உத்தமபாளையம், குளித்தலை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட உள்ள மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

எஸ்.ஆனந்தி

1960 ஜூலை 31ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். செங்கல்பட்டு, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, சிவகங்கை, நாமக்கல், திண்டுக்கல், சென்னை, திருச்சி நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

எஸ்.கண்ணம்மாள்

1960 ஜூலை 20ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை, சங்ககிரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, மேலூர், தஞ்சாவூர், திருச்சி, திருச்சேங்கோடு உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

கே.முரளி சங்கர்

1968 மே 31ல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். பின்னர் கும்பகோணம், கோவை, சேலம், சங்ககிரி, பாபநாசம், கொடுமுடி, தாராபுரம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்

செல்வி ஆர்.என்.மஞ்சுளா

1964 பிப்ரவரி 16ல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, நான்குனேரி, கோவில்பட்டி, சென்னை
உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்

டி.வி.தமிழ்ச்செல்வி


1968 ஜூன் 19ல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *