வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த கூடாது – தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடனே தாலிபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.நிர்வாகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு தீவிரவாத கும்பலிடம்  ஒரு நாடு கிடைத்திருப்பது, குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்ற செயலாகும்.  

அங்கு புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தாலிபான்கள் ,மக்களுக்கு எதிராக பல கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். பெண்கள் வெளியே வரக்கூடாது, பெண்கள் படிக்க கூடாது என்று ஆரம்பித்து ஆண்கள் முகச்சவரம் செய்ய கூடாது, திருடினால் கைகள் வெட்டப்பட்டு என்ற சட்டம் வரை பல சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளனர். தடையையும் மீறி யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

     தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன் அந்நாட்டு பொருளாதார நிலை மிக மோசமாகியது. தாலிபான்கள் ஆப்கானிஸ்டன் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என்றும்  பொருளாதாரம் சீரமைக்கப்படும் என்றும்  தெரிவித்தனர். ஆனால் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு வாழும்  மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இது போதாக்குறைக்கு அங்கு  அத்தியாவசிய  பொருள் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பசி, பட்டினி  போன்றவை ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஐ.நா.வும் மற்றும் உலக சுகாதார அமைப்பு மனிதநேய அடிப்படையில் அங்கு உதவி செய்து வந்து கொண்டிருக்கின்றன.

       இதுகுறித்து தலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகித் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்து மக்களும், கடை உரிமையாளர்களும், வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் வெளிநாட்டு கரன்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இது கண்டிப்பான உத்தரவு. இதை மீறுவோர் தண்டனைக்குள்ளாவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *