டிரம்பை சந்தித்த ஜாக் மா – கடுப்பான சீன அதிபர்

  சீனாவைச் சேர்ந்த முன்னணி வர்த்தக நிறுவனம் அலிபாபா. இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாக தனதாக்கிக் கொண்டதன் மூலம் இந்நிறுவனம் சீன நாட்டில் தொழில்நுட்பத்துறையில் முதல் நிறுவனமாக  உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் மூலம் கிடைத்த  40 பில்லியன் டாலர் சொத்து மதிப்பின்படி  சீனாவில் முதல் பணக்காரரானார் ஜாக் மா .

      தற்போது அலிபாபா தனது சேவையை உலகில் பல்வேறு நாடுகளில் தங்களது சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் 24ம் தேதி அலி பாபா நிறுவனங்களில் ஒன்றான அண்ட் குரூப்(ANT  GROUP) பொதுப் பங்கு வெளியீடு நடத்தப்பட இருந்தது. இதையொட்டி ஷாங்காயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தான் அவரை மாயமாகியது.”சீன வங்கிகள் அடகு கடை மனநிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதிகாரிகள் ரயில் நிலையத்தை நிர்வகிக்கும் வழிமுறையை விமானநிலையத்தை நிர்வகிக்கப் பயன்படுத்துகின்றனர்” என்று டிஜிட்டல் நிதி செயல்பாடுகள் தொடர்பாக சீன வங்கிகளின் செயல்பாடுகளை அந்த நிகழ்வில் அவர் விமர்சித்தார்.

      இது சீன வங்கி அதிகாரிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அதிபர் ஜி ஜின்பிங் தெரிய வந்தது. மறுநாளே ஜாக் மாவுக்கும் அன்ட் குழுமத்தின் சில நிர்வாக அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அன்ட் குழுமத்தின் பொதுப் பங்கு வெளியீடும் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜாக் மா மாயமானார்.

இந்நிலையில் ஜாக் மா அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஜனவரியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சீனாவை விமர்சித்தார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புக்கு சீனாவைக் குற்றம் சாட்டினார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான பதட்டம் ஏற்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் ஜனவரி 9-ம் தேதி அன்று சந்திப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.

தனது முன் அனுமதியின்றி ட்ரம்ப்பைச் சந்தித்தது குறித்து பெய்ஜிங் சீனா அதிபர் ஜி ஜின்பிங் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *