முஸ்லிம் அல்லாத மக்களுக்கு தனியாக நீதிமன்றம் – அபுதாபியில் அரசாணை வெளியீடு

  ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களில் மாற்றங்களை அறிமுகம் செய்தது. அதன்படி திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகள், மது அருந்துதல், மற்றும் கவுரவக் கொலை வழக்கில் பல்வேறு விதிகளை ரத்து செய்தல் உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிமல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்து செய்து கொள்ளவும் மற்றும் விவாகரத்துக்கு பின்னர் குழந்தைகளை கூட்டு முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று  அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

           அதுமட்டுமில்லாமல் விவாகரத்து பெறுபவர்கள் ஜீவனாம்சம் பெறுவதற்கும் இந்த ஆணை  வகை செய்கிறது. மேலும் முஸ்லிமல்லாத குடும்பங்களுக்கு கையாள புதிதாக நீதிமன்றம் ஒன்று நிறுவப்படும் என்றும் அந்த நீதிமன்றம் ஆங்கிலம் மற்றும் அரபு நாடுகளில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

        இதற்கான அரசாணையை ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பின் தலைவராக உள்ள ஷேக் கலீப் பின் ஜாயேத் அல்-நஹாயன் வெளியிட்டார். இவர் அந்நாட்டின் ஆட்சியாளரும் அதிபரின் அந்தஸ்தைப் பெற்றவர் ஆவார். உலகளாவிய போட்டித்தன்மை மேம்படுத்துவதாக தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *