ஹெய்தி நாட்டை விட்டு உடனே வெளியேறுங்கள் – கனடா அரசு உத்தரவு

  வட அமெரிக்காவில் உள்ள ஹெய்தி நாட்டில் பயங்கர எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறைபாடு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக அங்குள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனால் கனடா, ஹெய்தியில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து தனது அத்தியாவசிய மற்ற அலுவலர்கள் அனைவரையும் வெளியேற்றி வருவதோடு, கனேடிய சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

        இதற்கிடையே கன்னட அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கனடா  தூதராக அலுவலர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினர், அத்தியாவசிய மற்றும் கனடா பணியாளர்களை ஹெய்தியில் இருந்து வெளியேறுமாறு என்று தெரிவித்திருந்தது . மேலும் ஹெய்தியில் வசிக்கும் கனேடியர்களுக்கு ஹெய்தி நாட்டின் port-au-prince நகரில் அமைந்துள்ள கனேடிய தூதரகம் உதவி செய்து வருவதாக கனடா கூறுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஹெய்தி நாட்டில் நிலவி வரும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டில் வசிக்கும் கனேடியர்கள் கடத்தப்படும் அபாயமும் உள்ளது என்று கனடா தெரிவித்துள்ளது. எனவே ஹெய்தியில் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக வசித்திருப்பவர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கனடா அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *