கப்பல் கவிழ்ந்ததில் 31 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்

  பண்டைய காலத்தை  போலவே தற்போதும் உள்நாட்டுப் போர்களும், வன்முறைகளும் நடைபெற்று  வருகிறது . இந்த வன்முறையால் ஏற்படும் கொலைகளால்  மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால் மக்கள் தங்கள் வீட்டையும் நாட்டையும் விட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 இப்படி பயணம் செய்யும்போது பல சமயங்களில் அவர்களுக்கு சோகமான முடிவுகளே கிடைக்கிறது.இந்நிலையில் நேற்று  பிரிட்டனை நோக்கி சென்று கொண்டிருந்த படகு ஒன்று ஆங்கிலக் கால்வாயில் திடீரென கவிழ்ந்தது. அதில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அகதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது . உயிரிழந்தவர்களின் உடல்களை பத்திரமாக மீட்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இறந்தவர்களை தவிர மீதமுள்ள 3 பேரில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றும் ஒருவர் காணவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் இவர்கள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

      பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை சேர்ந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆள்கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 25,700 அகதிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *