“எங்களை பொருளாதாரத்தை மீட்க உதவுங்கள்” – தாலிபான்களின் கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக மறைமுக ஆட்சி செய்துகொண்டிருந்த அமெரிக்கா தனது ஆகஸ்ட் மாதம் வெளியேறியதால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியவுடன் அங்கு தற்காலிக அரசையும் நிறுவினார்கள் தாலிபான்கள். அதன்படி தாலிபான் அமைப்பிற்கு துணை நிறுவனரான அகுந்த் ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

     தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி உடன் அங்கு பொருளாதார நிலமை தலைகீழாக மாறியது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உச்சம் பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க அங்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தாலிபான் அன்புடன் அடுத்த வாரம் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய திலிருந்து முதல் தடவையாக தாலிபான்களின் துணை நிறுவனரான தொலைக்காட்சி வழியாக நேற்று மக்களிடம் பேசியுள்ளார். அதில் அவரது பேச்சு மட்டும்தான் ஒளிபரப்பானது அவரின் முகம் காட்டப்படவில்லை.

        அதில் அவர் கூறியது “மற்ற நாடுகளின் விவகாரங்களில் எப்போதும் நாங்கள் தலையிட மாட்டோம். உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்ல பொருளாதார உறவை பேண தயாராக உள்ளோம். தற்போது எங்கள் நாடு பல பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. மக்களின் ஆதரவுடனும் கடவுளின் கருணையால் இப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவோம். இதுவரை உலக நாடுகள் எங்களுக்கு அளித்த பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டாம் அதனைத் தொடர வேண்டும் என்று உலக நாடுகளை வேண்டுகிறோம் அதன் மூலமே எங்களை மக்களை மீட்டெடுக்க முடியும். பெண்கள் கல்வி கற்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றி அதை மேலும் விரிவுபடுத்தப்படும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *