நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மால்யா விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்

இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளில் போய் தஞ்சம் புகுவது பபுதிய செய்தி ஒன்றும் இல்லை. விஜய் மல்லையாவில் தொடங்கி நீரவ் மோடி வரை இந்திய வங்கியில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாடுகளுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார் விஜய் மல்லையா.
இதனை கண்டித்த நீதிமன்றம், விஜய் மல்லையா பண பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை அவரது பிள்ளைகளுக்குப் பரிவர்த்தனை செய்துள்ளார்.இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

நீதிமன்றம் அறிவித்த உத்தரவை மீறி நடந்ததால், அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பணிகளில் இங்கிலாந்தின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்றும் அந்த நடவடிக்கைகள் ரகசியமானவை என்பதால் அவை குறித்து அறிய முடியவில்லை என்றும் ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட இந்த கருத்தை பதிவு செய்து கொள்கிறோம்.
ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பாகியுள்ள நிலையில் தண்டனை விவரங்களை அறிவிக்கும் பொருட்டு, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை நீதிமன்றம் காத்திருக்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா விரும்பினால் ஆஜராகலாம் அல்லது அவரது வக்கீல் வாயிலாக வாதங்களை முன்னெடுக்கலாம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான விசாரணை வருகிற ஜனவரி 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தாவை நியமிக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *