ஆப்கானிஸ்தானிற்கு உதவ முன் வந்த இந்தியா

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று ஆளும் அரசினை நீக்கிவிட்டு தலிபான்கள் நாட்டை கைப்பற்றினர்.அங்கு புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் தாலிபான்கள் ,மக்களுக்கு எதிராக பல கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். பெண்கள் வெளியே வரக்கூடாது, பெண்கள் படிக்க கூடாது என்று ஆரம்பித்து ஆண்கள் முகச்சவரம் செய்ய கூடாது, திருடினால் கைகள் வெட்டப்பபடும்  என்ற சட்டம் வரை பல சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர்.மேலும் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி பொறுப்பு ஏற்று கொண்டது முதல் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. அதனால் ஆப்கானிஸ்தானில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது.மேலும் தாலிபான்கள் மற்ற நாடுகளுடன் நட்புறவு கொள்ளாததால், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவ எந்த நாடும் முன் வரவில்லை.

இந்நிலையில் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவின் ஐநா பிரதிநிதி யான திருமூர்த்தி ஆப்கானிஸ்தானில் நிலைமை படுமோசமாக இருப்பதாக கூறினார். எனவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாக அவர் கூறினார். இந்தியா சார்பில் இதுவரை 5 லட்சம் டவுட்ஸ் தடுப்பூசிகளும் 1.6 மீட்டர் உயிர்காக்கும் மருந்துகளின் அனுப்பி உள்ளதாக அவர் கூறினார்.மேலும் தேவையான அளவு மருத்துவ உதவிகளையும் பொருட்களையும் வழங்க இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *