கடனை கட்டுவதற்காக 100 கோடி கடன் வாங்கிய பாகிஸ்தான்

 கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானினில்  பல்வேறு அரசியல் குழப்பங்கள் நடந்து வருகின்றன. அந்நாட்டு ராணுவத்திற்கும் அரசுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக மோதல் ஏற்பட துவங்கியது. அதாவது பிரதமர் இம்ரான் கானுக்கும் , ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா ஆகியோருக்கும் இடையில் பல விஷயங்களில் கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் மொத்த கடன் சுமை குறித்து அந்நாட்டு ஸ்டேட் பாங்க் ஒரு அறிக்கை வெளியிட்டது . அந்த அறிக்கையின்படி பாகிஸ்தானின் கடன்சுமை அந்நாட்டு பணமதிப்பின்படி 50 டிரில்லியன் ரூபாயாக இருக்கிறது. குறிப்பாக இம்ரான் கான் பதவி ஏற்ற பிறகு தான் கடன் தொகை அதிகமானதாக தகவல்கள் வெளியானது.. ஆனால் ஸ்டேட் பேங்க் வெளியிட்ட இந்த அறிக்கை குறித்து சர்வதேசம் நிதியம் முற்றிலுமாக மறுத்து வந்தது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதற்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் 7.95% என்ற முன் எப்போதும் இல்லாத அதிக வட்டிக்கு பாகிஸ்தான் அரசு புதிதாக கடன் திரட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 7 ஆண்டுகளில் திரும்பச்செலுத்தத்தக்க வகையில் லாகூர் – இஸ்லாமாபாத் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை பிணையாக வைத்து இக்கடன் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.பாகிஸ்தானின் அன்னியச்செலாவணி பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை தற்காலிகமாக சமாளிக்க இத்தொகை பெறப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் கூறியுள்ளன.

சவுதி அரேபியாவிடம் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன் 300 கோடி டாலர்களை கடனாக பெற்ற பாகிஸ்தான் அதில் 200 கோடி டாலர்களை செலவளித்துவிட்டது. தற்போது அன்னியச்செலாவணி நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு மீண்டும் கடன் வாங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *