அமெரிக்காவில் கொரோனாவை விட ஓமைக்ரான் தான் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்ததோடு, உணவின்றியும் தவித்து வந்தனர்.

இதனை தடுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைய தொடங்கியது.ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய கொரோன வைரஸான ஓமைக்ரான் பரவ தொடங்கியது. இதனால் மீண்டும் பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவிடம் கிடைத்த தரவுகளின்படி அமெரிக்காவில் டெல்டா அலையின் போது ஏற்பட்ட தினசரி இறப்பு விகிதத்தை காட்டிலும், ஒமிக்ரானால் அதிகளவில் இறப்பது ஏற்படுவது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் தினசரி இறப்பு எண்ணிக்கை நவம்பர் பாதியிலிருந்து அதிகரித்து வருகிறது. வாரத்தில் நாள் ஒன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டுகிறது. கடந்த வியாக்கிழமை 2,267 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், டெல்டா அலை உச்சத்தில் இருந்த போது, செப்டம்பரில் அதிகப்பட்சமாக தினசரி இறப்பு 2,100ஆக இருந்துள்ளது.

ஒமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினாலும், அதிகளவில் பரவுவதன் காரணமாக பலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.காய்ச்சலை போலவே, வயதானோர்களுக்கும், இணை நோயுள்ளவர்களுக்கும், தடுப்பூசி போடதவர்களுக்கு ஒமிக்ரான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *