கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ’விற்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை உலகம் ஒரே நேரத்தில் இரண்டு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. முன்பு கொரோனாவை மட்டும் எதிர்கொண்ட உலக நாடுகள் தற்போது ஓமைக்ரான் பரவலையும் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்தது, “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . ஆனால் என் உடல் நலம் சீராக உள்ளது. வீட்டிலிருந்தே நான் என் பணியை செய்யவுள்ளேன். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.” என்று கூறியுள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடா எல்லையை கடக்கும் அனைத்து லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு மக்களிடையே கடும் எதிர்பலையை கிளப்பியது. மேலும் நூற்றுக்கணக்கான கனடா மக்கள் தலை நகரில் போராட்டத்தை நடத்தினர்.இதன் காரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தலைமறைவானார்.