இந்தாங்க சண்ட போடுங்க – உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

சோவியத் யூனியன் பிரிந்த போது உக்ரைன் தனி நாடாக அறிவிக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் ரஷ்யாவுடன் இணைந்தது. அதன் பிறகே உக்ரைன் – ரஷ்யா கிடையே பிரச்னை தொடங்கியது.இந்நிலையில், உக்ரைன் எல்லையில் 1 லட்சம் போர் வீரர்கள் மற்றும் நவீன போர் கருவிகளை ரஷ்யா நிறுத்தியுள்ளது . இதனால் அமெரிக்கா, உக்ரைனிலிருந்து தனது தூதரக அதிகாரிகளைக் கூட வெளியேற்றியது ரஷ்யாவும் – அமெரிக்காவும் ஆரம்பத்திலிருந்தே பரம எதிரியைப் போலச் செயல்படுவதால் உலக நாடுகள் இந்த விவகாரத்தைக் கூர்மையாகக் கவனித்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா ராணுவத்தின் மூத்த அதிகாரி, “அதிபர் பைடன் இந்த வாரம் வடக்கு கரோலினாவிலிருந்து 2000 படை வீரர்களை போலாந்து மற்றும் ஜெர்மனிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ வீரர்களை அனுப்பவில்லை. ஆனால் தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை அனுப்புகிறோம் என அதிபர் தெரிவித்திருக்கிறார்” என்றார்.