நாங்களும் மேல வருவோம் ! விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்

அமெரிக்காவின் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறிய பின்பு தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்தனர். இதனால் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன. இதனால் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி என்று மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தது, “ சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான தருணம் வந்துவிட்டது. சர்வதேச சமூகங்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தை இப்போது ஆர்வம் காட்டுகின்றன. இதுவே, ஆப்கனில் ஆளும் தலிபான் அரசை சர்வதேச சமூகம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்கிறது என்பதற்கான சான்று. காபூலில் விரைவி வெளிநாட்டுத் தூதரங்கள் செயல்பாட்டுக்கு வரும். நாம் சில விஷயங்களில் கெடுபிடி காட்டுவது நமது கொள்கை இதைப் புரிந்து கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகள் நம் நாட்டின் மீதான தடைகளை விரைவில் விலக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

ஆனாள் ஆப்கனில் கடந்த வாரம் கூட போராடிய பெண்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. பெண் கல்வி, பெண்ணுரிமையை உறுதி செய்யுமாறு தொடர்ந்து உலக நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.