அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டனுக்கு அருகில் உள்ள யூனியன் சதுக்கத்தில் காந்தியின் 8 அடி உயரச் சிலை அமைந்துள்ளது.
இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இழிவான செயலுக்கு இந்தியத் தூதரகம் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த இழிவான செயலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயலை தூதரகம் கடுமையாகக் கண்டிக்கிறது” என நியூயார்க் இந்தியத் துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை உடனடி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் உள்ள காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தொடர்ந்து காந்தி சிலை சேதப்படுத்துவதால், இந்தியர்கள் இணையத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்