பெரு நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து … 20 பேர் பலி

பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 20 பயணிகள் பலியானார்கள். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.  பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டயபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.இந்த பேருந்து திடீரென சாலையில் இருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைத்தடுமாறி 100 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து உள்ளே இடிபாடுகளில் சிக்கி 20 பயணிகள் பரிதாபமாக பலியாகினர்.


சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் உயிருக்கு போராடிய எஞ்சிய பயணிகளை மீட்டு டயபாம்பா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பள்ளத்தாக்கில் பேருந்து அடையாளம் தெரியாத வகையில் நொறுங்கி கிடந்தது. உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்தன. இதனை பார்த்த சுற்று வட்டார மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…