இது தேவையா கோபி !! காதல் மன்னனான எலான் மஸ்க் 

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கிற்கு தற்போது 50 வயது ஆகிறது.இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.பின்னர் அடுத்த ஆண்டே இவர்கள் மீண்டும் இணைந்தனர். 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது உறவு 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. டலுலா ரிலேவை எலான் மஸ்க் இரண்டு முறை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கிரீம்ஸ் (Grimes) என்கிற பாடகியை காதலித்த எலான் மஸ்க் அவரை திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இந்த உறவும் 3 ஆண்டுகளில் கசந்துபோக அவரை விட்டு பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தார் .

இந்நிலையில், தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது மீண்டும் காதல் வலையில் விழுந்து உள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்டாஷா பஸ்செட் என்கிற நடிகையை அவர் தற்போது காதலித்து வருகிறாராம். அவருடன் அவ்வப்போது டேட்டிங்கும் சென்று வருகிறாராம் எலான் மஸ்க்.50 வயதாகும் எலான் மஸ்க் 27 வயதாகும் நடிகை நட்டாஷா பஸ்செட்டை காதலித்து வருவது தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…