தேசிய பங்குச்சந்தை முறைகேடு: “முன்னாள் செயல் இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் கைது..!!”

தேசிய பங்குச் சந்தையின் முன்னால் செயல் இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் இயக்குனராகவும் விளங்கியவர் ஆனந்த் சுப்ரமணியன். கடந்த 2016 ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையை சேர்ந்த ஒரு யோகியின் ஆலோசனையை கேட்டு தேசிய பங்குச்சந்தையில் பல முக்கிய முடிவுகளை எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. அதோடு அந்த யோகியின் ஆலோசனையின்படி தான் ஆனந்த் சுப்பிரமணியத்தை செயல் இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்தார் எனவும் கூறப்பட்டது.

அப்போது முதல் சந்தை சார்ந்த முக்கிய முடிவுகளில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆனந்த் சுப்பிரமணியம் சில முடிவுகளை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்ததாகவும், அதன்படி சித்ரா ராமகிருஷ்ணா நடந்துகொண்டார் எனவும் சில கூற்றுகள் எழுந்தன. இந்நிலையில் தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வந்தது. இதுதொடர்பாக சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு சம்பந்தப்பட்ட சில இடங்களில் சிபிஐ போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆனந்த் சுப்பிரமணியம் நேற்று சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

ஊடகத்துறையினரை ஊக்குவித்த மா.சுப்பிரமணியன்… என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு…