உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது ரஷ்யா

தொடர்ந்து 10வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், மக்கள், ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளும், ஐ.நா போன்ற அமைப்புகளும் அறிவித்தும் ரஷ்யா போரை நிறுத்திய பாடில்லை.
போரின் பத்தாவது நாளான இன்று, உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும், தற்காலிகமாக போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக ரஷ்யா அதிபர் மாளிகை அறிவித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 மணி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
உக்ரனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தற்காலைக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.