தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த வடகொரியா….  கண்டனம் தெரிவிக்கும்  உலக நாடுகள்.

கடந்த சில மாதங்களாகவே வடகொரியா அரசு பல ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய மிக நீண்ட தூரம் பயணிக்கும் அதிநவீன ஏவுகணையை வடகொரியா உருவாக்கி உள்ளது.

ஹவாசோங்  17 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை கடந்த 24-ம் தேதி சோதனை செய்யப்பட்டது. மேலும் சோதனையானது வடகொரியா நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் நடத்தப்பட்டது.

இச்சோதனை வெற்றி பெற்ற நிலையில் தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ வீரர்களுடன் உரையாடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.    

உக்ரைன்-ரஷ்யா போர் நடக்கும் இந்த  சூழலில், இது போன்ற செயல் கண்டனத்துக்கு உரியது என பல நாடுகள் எச்சரித்துள்ளது.

அதை எதிர்க்கும் விதமாக வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதற்கு பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து தனது ஆதரவை தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் இந்த பொருளாதார  தடை  வடகொரியா குடிமக்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத  சமூக பொருளாதார பிரச்சனையை உண்டாகும் என மக்கள் அச்சப்படுகின்றன.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது  பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐநாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *