நட்பு இல்லாத நாடுகளுக்கு இனி கெடுபிடி..! அதிரடி காட்டும் ரஷ்யா…

கடந்த ஒரு மாதமாக உக்ரைன்- ரஷ்யா க்கு இடையில் போரானது நடந்து பெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாக்கு எதிராக பல நாடுகள் பொருளாதார தடை விதித்தனர்.
தன் நாட்டின் மீது விதித்த பொருளாதார தடையை எதிர்க்கும் விதமாக தன்னுடன் இணக்கமான நட்புறவை கடைபிடிக்காத நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா வழங்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
விரைவில் இதற்கான ஒப்புதலை ரஷ்ய அதிபர் புதின் வழங்க இருப்பதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து ஐரோப்பா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது ரஷ்யா இந்த நாடுகளுக்கு விசா வழங்குவதில் காட்டும் நெருக்கடியால் அமெரிக்கா, ஐரோப்பா நாட்டில் இருந்து ரஷ்யாவிற்கு இனி யாரும் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் நடுநிலை தன்மையை பேணி காத்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய வெளியுறவுத்துறை சார்பில் கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்த நடுநிலைத் தன்மையே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உதவியது என இந்திய தரப்பில் பேசப்படுகிறது.