சமூக வலைதளங்கள் முடக்கம்…  664 பேர் கைது…. அதிரடி காட்டும் இலங்கை அரசு..!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும்  போராட்ட களமாக மாறியுள்ளது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அதிபர் மாளிகை முன்பு போராட்டம் வெடித்தது. 

இந்த சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர முக்கிய நகரங்களில்  ஊரடங்கு அமுல்படுத்தியது இலங்கை அரசு. அதை தொடர்ந்து  அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

ஊரடங்கை மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்யவும்  காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி  போராட்டத்தில் ஈடுபட்ட 664 பேர் கைது செய்தது இலங்கை காவல்துறை. 

இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வரும் சூழ்நிலையில்  சமூக வலைதளங்களை  முடக்கம் செய்துள்ளது இலங்கை அரசு. இதன் மூலம்   யூடியூப், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால்  நாட்டில் ஏற்படும் போராட்டங்கள் தடுக்கப்படுவதுடன் மக்கள் ஒன்று கூடுவதை  தடுக்க முடியும் என இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில், இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய ராணுவப் படை சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.