இனப்படுகொலையில் ஈடுபட்ட ரஷ்யா..!  உக்ரைன் அதிபர் ஆவேசம்..!

உக்ரைன் – ரஷ்யா இடையில் கடந்த  ஒரு மாதமாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் துருக்கியில் இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ராணுவ படைகளை குறைத்துக்கொண்டது. 

உக்ரைன் மீதான தாக்குதல்கள் குறைக்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்த நிலையில் ரஷ்ய படைகள் சில நாட்களுக்கு முன்பு முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறியது. ரஷ்ய படைகள் வெளியேறினாலும் அவர்களின் அட்டூழியம் உக்கிரன் முழுவதும் காணப்படுகிறது. 

புச்சா பகுதியில் சுமார் சுமார்  410 பேரின் உடல்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்ரவதை மற்றும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தெருக்களில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும் சில உடல்கள் அழுகிய நிலையில் கருப்பு காகிதத்தில் கட்டப்பட்டுள்ளது. இதை உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

மேலும் ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ள மற்ற நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டால் அங்கும் இது போன்ற  பல கொடுமைகள் வெளிப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். 

ரசியாவின் இந்த கொடூர செயல் இனப்படுகொலைக்கு சமமானது என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. புச்சா பகுதியில்  என்ன நடந்தது என்ற உண்மை தன்மையை  உக்ரைன் அரசு கண்டறிய வேண்டும் என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.      

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….