உக்ரைன் நாட்டு கொடிக்கு முத்தம் கொடுத்த போப் 

உக்ரைனுக்கும் -ரஷ்யாவிற்கு கடந்த ஒன்றரை மாதமாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 10,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உக்ரைன் தலைநகர் கீவ் அருகே புச்சா பகுதியில் 400க்கும் மேற்பட்ட உடல்கள் கைப்பற்றப்பட்டது.இச்செய்தி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட உடல்களில் கைகள் கட்டப்பட்டு மிகவும் நெருக்கமான தூரத்தில் துப்பாக்கியால் சுட்டும் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் புச்சா படுகொலை குறித்து கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ் தெரிவித்தது, “உக்ரைனில் இருந்து சமீபத்தில் வந்த செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது.” என்று கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து உக்ரைனின் புச்சாவில் இருந்து அனுப்பப்பட்ட உக்ரைன் கொடிக்கு போப் பிரான்சிஸ் முத்தமிட்டு உயர்த்திக் காட்டினார். வாடிகன் ஆடிட்டோரியத்தில் நடந்த பார்வையாளர்கள் நிகழ்வில் உக்ரைனில் இருந்து வந்த 10 சிறுவர்களை அழைத்துப் பேசினார்.